லாரியின் பின்னால் வேகமாக மோதி சொருகிய ஆம்னி பஸ்! 6 பேர் துடிதுடித்து பலி! தூக்கத்தில் ஆக்சிலேட்டரை மிதித்த டிரைவரால் பலி!

கண்டெய்னர் மீது பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவமானது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் சுபாரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு மாசேவ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை மும்பையிலிருந்து கர்நாடகா மாநிலத்திலுள்ள பெலகாவிக்கு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. 

அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் செய்வதறியாது திகைத்தார். அப்போது கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதியது. மோதிய அதிர்ச்சியில் பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 

சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுள் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதே மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.