ஓரினச்சேர்க்கை! ஓடும் பேருந்தில் பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!

லண்டனை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்களை ஓடும் பேருந்தில் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மெளனியா கேமோநாட் வயது 28, மற்றும் கிறிஸ் ஆகிய இருவரும், இரவு பேருந்து ஒன்றில் லண்டனில் உள்ள கேம்டன் டௌனிற்கு செல்வதற்காக பயணம் செய்து உள்ளனர்.

அப்போது இவர்களுடன் 4 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஒன்று அதே பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்த இரு 

பெண்களை பார்த்த அவர்கள் இவர்கள் ஓரின சேர்க்கையாளர் என கண்டறிந்து உள்ளனர். இதனை அடுத்து அந்த இரு பெண்களிடம் தங்களது சிலுமிஷ விளையாட்டுக்களை ஆரம்பித்து உள்ளனர். 

முதலில் அந்த பெண்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவர்கள் அதனை செய்ய மறுத்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 15 மற்றும் 18 வயதே ஆன அந்த சிறுவர்கள், இந்த பெண்கள் இருவரையும் கண்டபடி  தாக்கியுள்ளனர்.  இதனால் பலத்த காயம் அடைந்த பெண்கள் இருவரும் தங்களை விட்டுவிடும் படி கதறி அழுது உள்ளனர்.

எதையுமே காதில் வாங்காத அந்த  கும்பல், மீண்டும் மீண்டும் அந்த பெண்களை அவர்களது பாலியல் உறவு முறையை வைத்து துன்புறுத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி இரவு நடந்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார் மெளனியா கேமோநாட். 

தொலைக்காட்சி பேட்டியில் பேசிய மெளனியா, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி விவரித்தார். முதலில் அந்த சிறுவர்கள் இந்த பெண்களை ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதனை அவர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பின்னர் இவர்கள் மீது நாணயங்களையும்  வீசியுள்ளனர் அந்த கொடூற கும்பல்.  அவ்ரகளுடைய ஆசைக்கு இந்த பெண்கள் இணங்காததால் கடுமாயாக தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த பெண்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இவர்கள் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்த சம்பவத்தை பற்றி அறிந்த காவல் அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை மையமாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வை பற்றி அறிந்த ஆண்ட நாட்டின் பிரதம மந்திரி தெரசா அவர்கள், இந்த சம்பவத்திற்கு பெரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.