சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்குஎண்ணிக்கை சற்று நேரம் முன்பு தொடங்கியது.இதனுடன் தமிழ்நாட்டின் இடைதேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகஉள்ளன.
கோலாகலமாக துவங்கியது வாக்கு எண்ணிக்கை! வெல்லப்போவது யார்?
முதலில் தபால் வாக்குகளும் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன. வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து பல்வேறு கட்சியினர் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஆரம்பித்த தேர்தல் இந்த மாதம் மே 19ம் தேதி 7 கட்டங்களாக நடந்து முடிவு பெற்றது. இறுதி முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Times தமிழ் நியூஸ் இணையதளத்தை பார்த்துகொண்டே இருக்கவும்.