ஓடும் ஆற்றை மறித்து தனியார் விடுதி கட்டப்பட்டிருக்கும் சம்பவமானது ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றை மறித்து சொகுசு விடுதி! ஏற்காட்டை அதிர வைத்த பிரபல ஹோட்டல்! ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ அதிர்ச்சி!
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட கொம்மக்காடு எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு "ஆங்கிலோ பிரெஞ்ச்" என்ற தனியார் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் கிணறு கட்டுவதற்காக தொகுதி எம்.எல்.ஏவான சித்ரா அதிகாரிகளுடன் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதி வழியாக செல்லும் ஆற்றை மரித்து இந்த சொகுசு விடுதியில் குளிர்காயும் அறை கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தார். மேலும் விதிமுறைக்கு அப்பாற்பட்டு ஆற்றிலிருந்து முறைகேடாக தண்ணீரை விடுதிக்கு எடுத்து செல்வதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டு சென்றார். விடுதி தரப்பினர் கூறுகையில், ஆற்றை மறித்து எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை என்றும், ஆற்றில் ஓடும் நீர் எந்தவித தடையுமின்றி செல்வதாக கூறினர்.
உடனடியாக வட்டாட்சியர் முருகேசன் பதிலளிக்கையில், "ஓடும் ஆற்றின் நீரோட்டத்தை மாற்றவும் அல்லது தடுக்கும் செயல்களில் ஈடுபடுவதும் சட்டவிரோதமாகும்" என்று கூறினார். முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவமானது ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.