ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..! ஊட்டியிலும் படை வெட்டுக்கிளி..! விவசாயிகளை பீதி அடைய வைக்கும் ஆதாரம்!

கொரோனாவுக்கு அடுத்தபடியாக உலகை அச்சுறுத்தி வரும் வெட்டிக்கிளி படையெடுப்பு தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


5 மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்தபடியாக உலக மக்களை அச்சுறுத்தும் மற்றொரு ஆபத்தும் ஏற்பட்டுவிட்டது. ஆப்ரிக்கா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக படையெடுப்பு வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வருகின்றன. இதனால் அப்பகுதியிலுள்ள வேளாண்மை பெரிதளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படையெடுப்பு வெட்டுக்கிளிகள் வட இந்தியாவை கடந்து நீலகிரி மாவட்டத்திலும் படையெடுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி வைரலாகி வருகிறது. அதாவது, நீலகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளை பாட்டில்களில் அடைத்து மாவட்ட ஆட்சியரிடம் சிலர் அளித்துள்ள செய்தியானது இன்று வெளியானது. அப்பகுதி விவசாயிகள் பேராபத்தில் இருப்பதாக சிலர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த வெட்டுக்கிளியை ஆய்வுக்காக ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பூச்சியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் பாதிப்பு என்பது அவற்றின் எண்ணிக்கையை பொருத்தே அமைந்துள்ளது. எண்ணிக்கை அதிகமானால் நிச்சயமாக இவை பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. சிலவற்றை கிளைகள் சரக்கு ரயில்கள் மற்றும் லாரிகள் மூலம் நம்மை வந்தடைந்து அது குறித்து நாம் எந்த கவலையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. 

ஏற்கனவே தென்னிந்தியாவில் பச்சை வெட்டுக்கிளிகள் மற்றும் பழுப்புநிற வெட்டுக்கிளிகள் ஆகியன தென்படுவது இயல்பாகும். ஆகையால் இன்னும் வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகத்தில் நடைபெறவில்லை. ஆதலால் மக்கள் யாரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில் "ஊட்டி மாவட்டத்தின் காந்தல் பகுதியில் விடுதலைப் படை எடுப்பின் நிகழ்ந்ததாக விவசாயிகள் கூறினர். சில வெட்டுக்கிளிகளை பாட்டில்களில் அடைத்து என்னிடம் வந்து ஒப்படைத்தனர். அவற்றை பரிசோதனைக்கு அனுப்பினேன். பரிசோதனையின் முதற்கட்ட  முடிவில், அவை படையெடுப்பு வெட்டுக்கிளிகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.