திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் திறப்பு..! லாக் டவுனில் முதலமைச்சரின் பக்கா பிளான்..! ஆனால்?

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைபடுத்தப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வரும் மே மாதம் நான்காம் தேதி முதல் மதுபான கடைகளையும் ஷாப்பிங் மால்களையும் திறப்பதற்கு அனுமதி அளிக்க உள்ளதாக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே மூன்றாம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு பின்பாக எந்தந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பொது மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். 

அந்தவகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது பற்றி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே ஐடி நிறுவனங்களும் அதனை சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் பணிக்கு திரும்பலாம் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள் மதுபான கடைகள் ஆகியவைகளையும் திறப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என ஆலோசனை செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பெங்களூருவில் நேற்றைய தினம் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் ஊரடங்கு உத்தரவு தளர்வு பற்றி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொழில்துறை நடவடிக்கைகள் துவங்குவதற்கு வரும் மே மாதம் நான்காம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும் என கூறியிருக்கிறார். இதனையடுத்து ஷாப்பிங் மால்கள், மதுபான கடைகள் ஆகிய அனைத்தும் ஒருநாள் வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் எப்போதும் போல் இயங்கும் என கூறப்படுகிறது. மே மூன்றாம் தேதிக்கு பின்பு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்று யோசனையில் குழம்பி இருந்த கர்நாடக மாநில மக்களுக்கு அம்மாநில முதல்வர் இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.