நாளை முதல் பிரதமரின் புதிய ஊரடங்கு..! அதில் இட்ம்பெறும் உத்தரவுகள் என்னென்ன?

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் ஊரடங்கை மீண்டும் நீட்டிக்க உள்ளதாகவும் அதில் என்னென்ன உத்தரவுகள் இடம் பெற உள்ளன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே 21 நாட்கள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு நாளை முடிவுக்கு வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் அதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் வேலையில் இந்தியாவில் உள்ள மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக சிகப்பு, ஆரஞ்சு, பச்சை அல்லது மஞ்சள் என பிரிக்கப்பட்டு அவற்றிற்கேற்ப ஊரடங்கில் பல நிபந்தனைகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிகப்பு மண்டலத்தின் கீழ்வரும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சற்று கூடுதல் கெடுபிடிகள் கடைபிடிக்கப்படும். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவை போலவே அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவமனை மருந்தகங்கள் ஆகியவைகள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ஆரஞ்சு மண்டலத்தின் கீழ்வரும் பாதிப்பு ஓரளவுக்கு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் எனவும் விவசாயம் மற்றும் சிறு குறு தொழில்களை நடத்துவதற்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பச்சை அல்லது மஞ்சள் மண்டலத்தின் கீழ் வரும் மிகவும் குறைவாக பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நிறைய தளர்வுகள் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட நேரத்தில் பொதுப் போக்குவரத்து சேவையான பேருந்து போக்குவரத்து போன்றவை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிகிறது.