ஊரடங்கு முடிகிறது..! ஆனால்..? மே 17க்கு பிறகு என்ன நடக்கும்..?

மே-17 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.


இந்தியா முழுவதிலும் 67,152 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 20,917 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 2,206 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டங்கள் அனைத்தும் பாதிப்புற்று ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் 3-ஆம் தேதியன்று சில தளர்வுகளுடன் 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

17-ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். முன்பு நடத்தப்பட்ட வீடியோ கான்பரன்சிங் போன்று இந்த கூட்டம் இருக்காது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ கான்பரன்சிங் முறையில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நீண்டநேரம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டு முதல்வர்களிடம் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.