தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு வெளியிட்டுள்ளார்.
30ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த எடப்பாடி..! திடீர் முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா?

தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகவே வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு வருகிற ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விலை இல்லாமல் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.