நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீடிக்கும்..! பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.


டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் மே 4ந் தேதிக்கு பிறகும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும். அதே சமயம் மாவட்டங்கள் பச்சை, ஆரஞ்ச் மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்படும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு கீழ் வரும் மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படும். எந்தெந்த பணிகளுக்கு தளர்வுகள் என்பதை உள்துறை அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் என மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை தொடரும்.