தனிமையில் இருந்த காதல் ஜோடி! கண்டுபிடித்து மொட்டை அடித்த கிராம மக்கள்! அதிர வைக்கும் காரணம்!

ஒடிசா மாநிலத்தில் தனது காதலியை பார்க்க வீட்டுக்கு வந்த காதலன், இருவரையும் பிடித்து மொட்டை அடித்த ஊர் மக்கள்.


கடந்த ஜூன் 22ஆம் தேதி மயூர்பஞ்சில் உள்ள கரஞ்சியா தொகுதியின் மாண்டுவா கிராமத்தில் உள்ள தனது காதலியை பார்க்க காதலன் அவளின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவர்களைப் பார்த்த அந்த ஊர் மக்கள் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர் அப்போது அப்பெண் இவர் தனது காதலன் தான் ஊர் பொதுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரது காதலனை தாக்கியுள்ளனர், பின்னர் இருவரையும் மொட்டை அடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவத்திற்கு காரணமான  நபர்களை கைது செய்தனர். இதையடுத்து வேறு யாரேனும் இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.