உள்ளாட்சி தேர்தல் தேதி! மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

இன்று காலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக அனைத்து பணிகளும் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை தேர்தல் ஆணைய அதிகாரி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் கிராமபுற ஊராட்சி தேர்தலுக்கான தேதிகள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வரும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தலானது இரு கட்டங்களாக பிரித்து நடைபெற உள்ளது.

மேலும் பேசிய தேர்தல் ஆணையர் திரு.பழனிச்சாமி, மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சி ,வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிக்கான தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்படவில்லை என்றும் அவற்றை பின்னர் அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.