20ந் தேதி முதல் பஸ் ஓடும்..! பொதுப் போக்குவரத்திற்கு ஓகே சொன்ன மோடி! ஆனால்?

வரும் 20ந் தேதி முதல் டவுன் மற்றும் கார்ப்பரேசன் பஸ்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


3ம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து திங்கட்கிழமை முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கடந்த 3 ஊரடங்குகளை காட்டிலும் 4வது கட்ட ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என்று ஏற்கனவே மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த முறை ஊரடங்கை அமல்படுத்தும் விதத்தை மாநில அரசுகள் தேர்வு செய்ய உள்ளன. அதன்படி பல மாநில அரசுகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் டவுன் மற்றும் கார்ப்பரேசன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் விமான சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. உள்ளூர் விமானப்போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் படி வரும் 20ந் தேதி முதல் பேருந்துகளை இயக்க பல்வேறு மாநிலங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஆனால்தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாத துவக்கத்தில் தான் பேருந்து போக்குவரத்து துவங்கும் என்று கூறப்படுகிறது.