கணவன் இல்லாமல் தனிமையில் தவித்த பர்வீன் பானுவுக்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்!

திருப்பூரில் தனியாக வசித்து வந்த பெண்ணை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு பர்வீன் பானு என்பவர் வசித்து வருகிறார். வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவர் வீட்டின் உரிமையாளரின் பெயர் சாந்தி.வழக்கமாக பர்வீன் பானு தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து தன் பணிகளை செய்து வருவார். சாந்திக்கும் பர்வீன் பானு கும் இடையே நெருக்கம் உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக இன்று பர்வீன் பானு விடிந்து வெகுநேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளி வரவில்லை. அவருக்காக எதிர்பார்த்திருந்த சாந்தி ஒரு கட்டத்திற்கு மேல் பதறினார். அருகில் இருந்தோரின்  உதவியுடன் சாந்தி பர்வீன் பானு வின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது பர்வீன் பானு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த துயர சம்பவத்தில் தகவலை திருப்பூர் தெற்கு காவல் துறையினருக்கு உடனடியாக  சம்பவத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் பர்வீன் பானு வின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவமானது திருப்பூர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.