குளிக்கப்போறதா சொல்லிட்டு போனாளுங்க..! ஆனால்? குளத்தில் வைத்து இரட்டை சகோதரிகளுக்கு நேர்ந்த பயங்கரம்!

குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவமானது மணப்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட வேம்பனூர் ஊராட்சியில் அமைந்துள்ள சங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை. இவர் விவசாயியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் கண்ணம்மாள். இத்தம்பதியினருக்கு ராமப்பிரியா மற்றும் லட்சுமி பிரியா இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய வயது 9.

பள்ளி விடுமுறையில் உள்ளதால் சகோதரிகள் இருவரும் அப்பகுதியிலுள்ள கும்படிக்குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். சம்பவத்தன்று துணி துவைத்து முடித்து விட்டு இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் குளத்தின் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும்  மீட்டெடுத்து உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இருவரின் சடலங்களையும் வீரமலை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார்.

தகவலறிந்து வீரமலை என் வீட்டிற்கு சென்ற அப்பகுதி காவல்துறையினர் இரட்டை குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்தவுடனே அவர்களுடைய உடல்களை பெற்றோரிடம் காவல்துறையினர் வழங்கினர்.

ஒன்றாய் பிறந்த இரட்டையர்கள் ஒன்றாகவே உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.