நடிகர் சிம்பு 2 படங்களுக்கு ஒரே நாளில் பாடியுள்ள சம்பவமானது கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் ரெண்டு..! - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

புகழ்பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். இவர் கதாநாயகனாக நடித்த பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா ,சிலம்பாட்டம் ஆகியன இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன. சிம்பு பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
இவர் பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் இவர் 2 படங்களுக்கு ஒரே நாளில் பாடியுள்ள நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு சஞ்சனா கல்மஞ்சியுடன் இணைந்து சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் படத்தில் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார். இவ்விரண்டு பாடல்களையும் அவர் ஒரே தினத்தில் பாடியுள்ளார். இவ்விரு பாடல்களும் விரைவில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. தற்போது சிம்பு தன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளார்.