காதல்! நெருக்கம்! கர்ப்பம்! கருக்கலைப்பு! பிறகு மரணம்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

திருமண ஆசை காட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவான சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பிரபு என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் இந்தோ-திபெத் எல்லைப்பகுதியில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த பி.ஏ பட்டதாரியான கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் அனுபவித்து உள்ளனர்.

இதனால் கவுசல்யா கர்ப்பமடைந்தார். இதனை பிரபுவிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பிரபு இதனை மறுத்துள்ளார். மேலும் கருவை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கௌசல்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உயிருக்கு போராடிய நிலையில் கௌசல்யாவை அரசு பொது மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் அனுமதித்தனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கௌசல்யா எதிர்பாராவிதமாக சிகிச்சை பலனின்றி 3-ஆம் தேதியன்று உயிரிழந்தார். ஒரு சரோஜாவின் உறவினர்கள் பிரபு மீது பாலியல் பலாத்கார புகாரில் மயிலம் காவல்துறையிடம் அளித்தனர். 3-ஆம் தேதியன்று கைதான பிரபு மறுநாளே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனை அறிந்த கௌசல்யாவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி காவல்துறையினர் பிரபுவின் தந்தையான சேகரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்துள்ளனர். அதன் பின்னரே கௌசல்யாவின் உடலில் இருக்கும் அவருடைய உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.