முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்தவர்களின் பட்டியல்.! அடேங்கப்பா.. இத்தனை கோடி பணமா..?

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

கடந்த 22.7.2020 முதல் 7.10.2020 வரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய், கல்ஸ் குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய், இண்டுஸ்லாண்ட் பாங்க் லிமிடெட் 95 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளன.

மேலும், நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய், . இராம. ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய், கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020, 23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய் கொடுத்துள்ளன.

இதுதவிர, டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய் என, கடந்த 7.10.2020 முடிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.