நயன்தாராவுக்கு ரூ.5 கோடி! காஜல், சமந்தா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஒரு காலத்தில் சினிமா என்றாலே ஹீரோக்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படும் என்று கூறப்பட்டது.


அந்த நிலை இப்போது முற்றிலுமாக தலைகீழாக மாறியுள்ளது என்று கூறவேண்டும். ஏனென்றால் முன்பெல்லாம் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக தான் திரைப்படங்கள் அமைந்தன. ஆனால் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான திரைப்படங்கள் வரிசைகட்டி வருகின்றன என்று தான் கூறவேண்டும் . இந்த விதமாக திரைத்துறையை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று கூறினால் அது மிகையாகாது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் விஜய், அஜித் , ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சினிமா துறையில் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று இருந்த நிலையை மாற்றி ஹீரோயின்கள் ஆளும் தனித்துவமாக நடிக்க இயலும் என்பதை உணர்த்தியவர் இவர்தான்.

இப்படியாக இவர் நடித்த முதல் திரைப்படம் தான் மாயா. இதற்குப்பின் டோரா , அறம் , கோலமாவு கோகிலா, ஐரா என பல திரைப்படங்களில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றார். இதற்குப் பின்புதான் ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்று கூறப்படுகிறது. இவர் சுமார் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் மிகப்பெரிய முன்னணி நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பை தவற விடுவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நயன்தாராவைப் போலவே திரிஷா தமன்னா, ஜோதிகா , சமந்தா போன்ற நடிகைகளும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதாவது நடிகை சமந்தா யூ டன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . இந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் என்றே கூறலாம். நடிகை சமந்தா தன்னுடைய திரைப்படத்திற்கு 1.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. 

இதேபோல் நடிகை ஜோதிகாவும் தன்னுடைய கணவர் தயாரிக்கும் திரைப்படங்களான 36 வயதினிலே, நாச்சியார் போன்ற திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பின்பு நீண்ட காலமாக திரைத்துறையில் கால் பதிக்காத நடிகை ஜோதிகா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்துவருகிறார் .

இதே மாதிரி நடிகை கீர்த்தி சுரேஷ் , மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் 1.5 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் நடிகை காஜல் அகர்வால், நடிகை தமன்னா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , அமலாபால் போன்றோரும் தங்களுடைய தனிப்பட்ட நடிப்பை திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றே கூறவேண்டும் . இவர்களின் சம்பளமும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை என்கிறார்கள்.