ஒரே ஒரு குவாட்டர் போதும்ங்கய்யா..! கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் காத்துக்கிடந்த குடிமகன்கள்..! எங்கு தெரியுமா?

49 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆண்கள் முண்டியடித்துக்கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதிலும் 40,263 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 10,887 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,306 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் நேற்றுவரை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன‌. நாடு முழுவதிலும் மார்ச் 25-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் பலரும்  கள்ளச்சாராயம் காய்ச்சி பருக முடிவெடுத்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து வந்தனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாக உள்ள இடங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகள் வருவாயை ஈட்டுவதற்காக மதுக்கடைகளை இன்று முதல் திறந்து வைத்துள்ளன. அதன்படி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் ஆந்திர மாநிலத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளார்.

சித்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு மதுக்கடையில் இன்று அதிகாலை முதலே அளவுக்கு அதிகமாக கூட்டம் அலைமோதியது. 1 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் முண்டியடித்து கொண்டதால் காவல்துறையினர் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கினாலும் சரி நிச்சயமாக மது வாங்கி தான் தீருவோம் என்று அலைமோதிய ஆண்களின் நிலை அனைவரையும் கோபமடைய செய்துள்ளது.