இன்னொரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம்! கணவர் நாக சைத்தன்யாவுக்கு நடிகை சமந்தா கொடுத்த அதிரடி பதிலடி

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருபவர். தற்போது வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக மட்டுமல்லாமல் தனித்தன்மை வாய்ந்த ரோல்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


சமீபத்தில் தமிழில் அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் மஜிலி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் மஜிலி திரைப்படத்தில் தனது கணவருடன் நடித்துள்ளார் சமந்தா . 

மேலும் இதே படத்தில் தனது கணவரும் மற்றும் நடிகையுமான திவ்யான்ஷா என்பவரும் உதட்டு முத்தக் காட்சியில் நடித்துள்ளனர். தனக்கு முன்னரே இன்னொருவருடன் உதட்டு முத்தக் காட்சியில் தன் கணவர் நடிப்பது பற்றி சமந்தாவிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் இருவரும் எப்போதும் ஒரு அற்புதமான உறவை எங்களுக்குள் வைத்துள்ளோம்.  நண்பர்களாகவும், கணவன் மனைவியாகவும் எங்களுக்கும் அதீத புரிதல் உள்ளது .

நடிப்பிற்கும் உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. அதை நான் செய்தாலும் சரி அவர் செய்தாலும் சரி எங்கள் இருவருக்குமே ஒரே விதி தான். இதனால் இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறினார் சமந்தா. அதாவது தனது கணவனுக்கு போட்டியாக தானும் லிப் லாக் செய்ய உள்ளதாக இப்படி கூறியுள்ளார் சமந்தார்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது