மின்னல் தாக்கி பற்றி எரிந்த நபர்! அருகாமையில் இருந்த பெண் செய்த துணிகர செயல்! பிறகு நேர்ந்த அதிசயம்!

இளம் பெண்ணொருவர் மழையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இங்க அலெக்ஸ் கொரியாஸ் என்பவர் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அவ்வாறு மழை பெய்த ஒரு நாளில் தன்னுடைய நாயை அழைத்துக்கொண்டு அலெக்ஸ் வீதியில் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர் மீது மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கிய உடனே சம்பவ இடத்திலேயே அவர் சரிந்து விழுந்தார். அப்போது அவ்வழியாக டெக்சாஸ் மாகாணத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றும் கிறிஸ்டி மில்டர் என்பவர் அலெக்ஸி பார்த்தவுடன் தன்னுடைய வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிஆர்பி சிகிச்சை அளித்தார். 

கிறிஸ்டி கூறுகையில், "மின்னல் அடித்த போது சம்பவ இடத்திலேயே அலெக்ஸ் அறிந்தார். நான், என்னுடைய சக ஊழியர், மற்றொரு அந்நியர் அவரை மீட்டோம். அவரை மீட்கும் போது அவருடைய துணி முழுவதும் எரிந்துவிட்டது. மின்னல் தாக்கிய சாலையில் துளை ஏற்பட்டிருந்தது" பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என்று கூறினார்.

அலெக்ஸுக்கு கடுமையாக தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடைய இடது காது கேட்கவில்லை. மேலும், அவருடைய விளா, தலை ஆகியன வீங்கியுள்ளன. அவருடைய சிகிச்சைக்காக உறவினர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.