கண் இமைக்கும் நொடி..! விமானத்தின் மீது விழுந்த இடி மின்னல்..! ஆனால் நிகழ்ந்த அதிசயம்! பரபர சம்பவம்!

மின்னல் தாக்குதலிலிருந்து ஓடு பாதையில் நின்று கொண்டிருந்த விமானம் மயிரிழையில் தப்பித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்ட்சர்ச் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் எமிரேட்ஸ் ரக விமானமான "ஏர்பஸ் ஏ-380" நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு மின்னல் விமானத்தின் அருகே தாக்கியது. இடி மின்னலிலிருந்து விமானமானது மயிரிழையில் தப்பியது. 

இந்த சம்பவத்தை கார்டன் சிட்டி ஹெலிகாப்டரில் பயணித்து கொண்டிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

நியூசிலாந்து நாட்டின் வானிலை ஆய்வு மையம் கிறிஸ்ட்சர்ச் நகரில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது. மேலும் கேன்டர்பரி பிராந்தியத்தில் கடுமையான புயல் தாக்கம் இருந்தது. ஆலங்கட்டி மழையானது பல்வேறு இடங்களில் முட்டையின் அளவிற்கு பெய்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மணி நேர இடைவெளியில் 700-க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையத்தில் விடுக்கப்பட்டிருந்தத எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.