கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் நூலகர் தகாத முறையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டிப் பெருக்கனு கூட்டிட்டு போய் தொடக்கூடாத இடத்துல தொடுறார்..! கல்லூரி லைப்ரேரியனால் மாணவிகளுக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்!
வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அரசு எடுத்து நடத்தும் கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த கல்லூரியில் நூலகராக தாமோதரன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது நூலகத்தை சுத்தம் செய்து தருமாறு மாணவிகளை அழைத்து செல்வார்.
நூலகத்திற்கு சென்றவுடன் மாணவிகளிடம் தகாத சில்மிஷங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அந்த மாணவிகளை வெளியில் கூறக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். இந்த சம்பவங்கள் கடந்த 4 ஆண்டுகளாக அரங்கேறி வந்துள்ளன.
இதனிடையே சமீபத்தில் சில மாணவிகள் தாமோதரனுக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்திய பிறகு தாமோதரனை இடைநீக்கம் செய்தனர். இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாமோதரனின்நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த மாணவர்கள் அனைவரும் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதாவது, "தாமோதரனை நிரந்தரமாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தங்களை வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டும் கல்வி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.