தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் எண்ணிலடங்காத மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. அதனாலே கடவுளுக்குப் படைக்கப்படும் பெருமை கிடைத்துள்ளது.


·         எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது.

·         ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்வதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடித்தால் போதும்.

·         வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்துவந்தால் ஜீரணக் கோளாறுகளும், உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.

·         எலுமிச்சையில் இருக்கும் பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து கொழுப்பையும் குறைக்கிறது.