அண்ணாச்சி வந்தாச்சு! ஹீரோ அவதாரம்! முன்னணி ஹீரோயினுடன் பேச்சுவார்த்தை!

தமிழகத்திலேயே சிறந்து விளங்கி வரும் கடைகளுள் சரவணா ஸ்டோர்ஸ் ஒன்றாகும்.


இந்த கடையின் முதலாளி "லெஜண்ட் சரவணன்" என்பவராவார். இவர் பல்வேறு முன்னணி நடிகைகளுடன் தன் கடை விளம்பரங்களில் நடித்து சர்ச்சைகளை உருவாக்கினார். இந்நிலையில் இவர் கோலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க போவதாக பல்வேறு வதந்திகள் சுற்றி வந்தன.

அதனைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அவரை புரட்டி எடுக்கும் வகையில் கலாய்த்ததும் குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களை அழைக்காமல், தானே தன்னுடைய கடை விளம்பரங்களில் நடித்தது நெட்டிசன்கள் அவரை அதிகமாகக் கலாய்த்துள்ளனர்.

இந்நிலையில் அவர் சம்பந்தப்பட்ட உறுதியான தகவல்கள் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளன. இவருடைய முதல் படத்தை ஜேடி ஜெர்ரி என்று இயக்குனர் இயக்கப்போகின்றனர்.

இந்த படமானது 2020ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளிவர போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான முறையான அறிவிப்பு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இவர் ஹீரோவாக நடிப்பது எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் முன்னணி ஹீரோயினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.