என் மகள் சின்ன பொன்னு! அவளை விட்டு விடுங்க! பிரபல நடிகை கதறல்!

பாலிவுடின் மிகப்பெரிய பிரபலமான நடிகை கஜோல் தாதா ஸாஹெப் பால்கே விருது வழங்கும் விழாவில் ஊடகத்திற்கு  ஒரு பேட்டி அளித்துள்ளார். இவரின் கணவர் பிரபல பாலிவுட் கதாநாயகனான அஜய் தேவ்கன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் நட்சத்திரங்களின் குழந்தைகளை அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


கஜோல் மகளின் பெயர் னைஸா தேவ்கன் என்பதாகும். ஊடகச்சந்திப்பில் அவருடைய மகளைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன.னைஸாவிற்கு பாலிவுட்டில் நடிக்க திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு கஜோல் "அவளுக்கு 16 வயது தான் ஆகியுள்ளது என்றும், அவள் தன்னுடைய பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறார், அவளை தற்போதைக்கு விட்டு விடுங்கள்" என்று பதிலளித்தார்.

விருது கிடைத்ததற்கு அவர் " எந்த விருது கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைவேன் என்றும், தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.அவர் கடைசியாக நடித்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள போவதாக கூறினார். தன்னுடைய அடுத்த படத்தை பற்றி விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார்.

இதையறிந்த கஜோலின் ரசிகர்கள் இணையத்தில் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.