டைம்ஸ் நவ் EXIT POLL! மொத்தமாக பாஜகவிற்கு எத்தனை இடம் தெரியுமா?

இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன


இந்திய அளவில் தற்போது முன்னணி ஆங்கில ஊடகமாக திகழ்வது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தான். இந்தத் தொலைக்காட்சித் இந்தியா முழுவதும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 கண்டங்களிலும் வாக்காளர்களை அணுகி கருத்துக் கணிப்பு நடத்த உள்ளதாக டைம்ஸ் நவ் கூறியுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி 306 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் நவ். பெரும்பான்மைக்கு 282 இடங்களில் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 106 இடங்களைப் பெறும் என்று டைம்ஸ் நவ்.

அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி 132 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கணித்துள்ளது. இதர பிராந்தியக் கட்சிகள் சுமார் 104 இடங்களில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் தெரிவிக்கிறது.