விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு வழக்கறிஞரால் நேர்ந்த பகீர் சம்பவம்! வைரல் வீடியோ!

விழுப்புரம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் ஒருவர் தன் கட்சிக்காரரான இளம்பெண்ணை தாக்கிய சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள அவ்வையார் குப்பம் என்னும் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணமாகி விட்டது. இவருக்கும் இவருடைய கணவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற சம்மதித்தனர். இருவரும் வழக்கறிஞர்களை சந்தித்து விவாகரத்து வேண்டும் என்று கூறியுள்ளனர். அம்பிகாவின் வழக்கறிஞரின் பெயர் தனஞ்செயன்.

திடீரென்று சில தினங்களுக்கு முன்பு இருதரப்பு வழக்கறிஞர்களும் அம்பிகா மற்றும் அவரது கணவரை ஆலோசிக்காது வழக்கினை நிறைவு செய்துள்ளனர். இந்த சம்பவம் இருவருக்குமே அதிர்ச்சியாக அமைந்தது.

அம்பிகா தன்னுடைய வழக்கறிஞரான தனஞ்செயனிடம் முறையிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு வாக்குவாதங்கள் கடுமையாக தொடங்கின. ஆத்திரமடைந்த தனஞ்ஜெயன் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அம்பிகாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படுகாயமடைந்த அம்பிகா விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.