லதா ரஜினிகாந்த்தை அலற வைத்த அதிர்ச்சி வீடியோ... வைரலாகும் கொடூரம்

பிரபல கோலிவுட் ஜாம்பவான் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "Peace for Children" ("பீஸ் ஃபார் சில்ட்ரன்") என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பலனடைந்து வருகின்றனர். இந்த தொண்டு நிறுவனத்தை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். அமைப்பின் மூலமாக குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை மிகவும் தீவிரமாக கண்டித்து போராட்டங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் மீது ட்விட்டரில் வெளியிட்டது வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண்ணொருவர் கைக் குழந்தையை அடித்து துன்புறுத்துவது போன்று அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த பெண் குழந்தையை அடித்து கைகளை முறுக்கி மேலிருந்து கீழே தூக்கிப் போடுகிறார். அந்த குழந்தை கதறி அழுது கொண்டிருக்கிறது.

இதனை கண்டித்து லதா ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவொன்றை செய்துள்ளார். "அனைவரும் ஒரு நிமிடம் வீடியோவை பாருங்கள். குழந்தையை பெண்ணொருவர் ஈவிரக்கமின்றி அடித்து துன்புறுத்துகிறார். இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். இந்த வீடியோ வெளிவந்தது பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தால் உங்கள் டோல் ஃப்ரி என்னை அழைத்து தொடர்பு கொள்ளவும்" என்று அவர் பதிவு செய்திருந்தார். 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் தங்களால் இயன்ற வரை பகிர்ந்து அந்தப் பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.