லலிதா ஜூவல்லரி உரிமையாளரிடம் ரூ.2 கோடியை சுருட்டிய திமுக பிரமுகர்..! யார்? எப்படி தெரியுமா?

பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும பன்னீர்செல்வம், லலிதா ஜுவல்லரி உரிமையாளரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிலமோசடி செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


லலிதா ஜுவல்லரி நிறுவனம் தங்களுடைய பல கிளைகளை பல இடங்களில் உருவாக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இந்நிறுவனம் புதியதாக திருவண்ணாமலையிலும் கிளை ஒன்றை துவங்கி உள்ளது. இந்த புதிய கலையை போக்குவதற்காக அங்கு லலிதா ஜுவல்லரி உரிமையாளர் இடம் ஒன்றை தேர்வு செய்து இருந்திருக்கிறார்.

அந்நேரத்தில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும பன்னீர்செல்வம், லலிதா ஜுவல்லரி உரிமையாளரிடம் தனக்கு சொந்தமாக திருமஞ்சன கோபுரம் அருகே இடம் இருப்பதாக கூறியிருக்கிறார். பின்னர் அந்த இடத்தை தன்னுடையது என்று கூறி பன்னீர்செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு 1.75 கோடி ரூபாய்க்கு லலிதா ஜுவல்லரி உரிமையாளருக்கு விற்றிருக்கிறார்.

இடத்தை வாங்கியபின் லலிதா ஜுவல்லரி தன்னுடைய பிள்ளையை அங்கு துவங்கியது. பின்னர் ராதா என்பவர் அந்த இடத்தை கோரி பிரச்சினை செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பிரச்சினையை அடுத்து பன்னீர்செல்வம் மேலும் ஒரு கோடி ரூபாய் தனக்கு அளிக்குமாறு லலிதா ஜுவல்லரி உரிமையாளரை மிரட்டி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை கிளையில் பல புதிய பிரச்சினைகளையும் அவர் கிளப்பியிருக்கிறார். லலிதா ஜுவல்லரி திருவண்ணாமலை கிளை மேலாளர் பத்மநாபன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். பன்னீர்செல்வம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதனை அறிந்து கொண்ட லலிதா ஜுவல்லரி உரிமையாளர் பன்னீர் செல்வத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் சிக்கினால் கைது செய்யப்படலாம் என்பதற்காக பன்னீர்செல்வம் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.