ஆந்திரா-தெலுங்கானாவுக்கு அள்ளிக் கொடுத்த லலிதா ஜூவல்லரி ஓனர்..! வாழ வைத்த தமிழகத்தை வஞ்சித்த அதிர்ச்சி!

பிரபல லலிதா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான கிரன் குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். ஆனால் வாழவைத்த தமிழகத்திற்கு அவர் கிள்ளி கூட கொடுக்கவில்லை.


லலிதா ஜுவல்லர்ஸ் விளம்பரங்களுக்காக அதன் உரிமையாளரான கிரண்குமார் தானே விளம்பர படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவரது தந்தை வியாபாரம் நடத்துவதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு பிறந்து வளர்ந்த இவரது மகன் கிரன் குமார் சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கி தற்போது லலிதா ஜுவல்லரியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் திருவள்ளூர், திருப்பதி ,விசாகப்பட்டினம் ,ஹைதராபாத், திருச்சி போன்ற பல்வேறு நகரங்களில் ஏராளமான கடைகளை தொடங்கினார். இந்நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு பிரபலங்களும் நிதி உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் லலிதா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கிரன் குமார் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

இவர் பிற மாநிலங்களில் பல்வேறு கிளைகளை நடத்தி வந்தாலும் தமிழ்நாட்டில் தான் இவருக்கு அதிகமான கிளைகள் உள்ளன. எனினும் இவரை வாழவைத்த தமிழக மக்களுக்கு இதுவரை எந்த நிதி உதவியும் அவர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.