லலிதா ஜூவல்லரி கொள்ளை! நகைகள் இல்லாத கடையை பார்த்து ஓனர் கிரண் குமார் என்ன செய்தார் தெரியுமா?

திருச்சியில் உள்ள தனது கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட தகவல் அறிந்து அங்கு விரைந்த உரிமையாளர் கிரண்குமார் செய்த செயல் தான் தற்போது டால்க் ஆஃப் த டவுனாக உள்ளது.


காலை பத்து மணி அளவில் கடையை திறந்த மேலாளர் முதல் தளத்தில் அனைத்தும் அலங்கோலமாக இருப்பதை பார்த்து அப்படியே நெஞ்சை பிடித்தபடி தரையில் அமர்ந்துள்ளார். விபரீதத்தை உணர்ந்த சக ஊழியர்கள் உடனடியாக எண் 100ஐ தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளனர். முதலில் இதனை போலீசார் பெரிய விவகாரமாக கருதவில்லை.

பேட்ரோல் வாகனம் வந்து பார்த்த பிறகு தான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. உடனடியாக திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் விரைந்து வந்து சேர்ந்தார். கடைக்குள் ஆய்வு செய்த அவர், பின்புறம் ஓட்டை போடப்பட்டிருந்த பகுதியையும் பார்வையிட்டார். மோப்ப நாயால் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இதனை அடுத்து ஓனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக என்று போலீசார் கேட்டுள்ளனர். அவர் சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையெ பிற்பகலில் நகைக்கடைக்கு ஓனர் வந்து சேர்ந்தார். வந்தவர் நேராக கடைக்குள் சென்றார்.

தரைத்தளம் மொத்தமாக துடைத்து வைத்திருப்பது போல் இருப்பதை பார்த்த அவர் ஒரு கனம் அப்படியே ஆடிப்போய் நின்றுள்ளார். பிறகு மேலாளரை அழைத்து குரல்கள் உடைந்த நிலையில் என்ன ஆனது என்று கேட்டுள்ளார். அவரும் கைகளை விரிக்க காவல் ஆணையர் அமல்ராஜிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

புறப்படும் போது எதனால் இப்படி நேர்ந்தது என்று எனக்கு தெரிந்தாக வேண்டும் என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மேலாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார் கிரண்குமார். பிறகு மீண்டும் வரவழைக்கப்பட்ட அவரிடம் நகைகளின் மதிப்பு குறித்து கேட்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பறிகு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை மாயம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் காலையில் இருந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.