கள்ளக்காதல் புகழ் லட்சுமி நடிகைக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி பிரியா பிரபல எழுத்தாளர்-ஐ திருமணம் செய்து கொண்டார்.


"முந்தினம் பார்த்தேனே" என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது . இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி பிரியா நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 

இதனையடுத்து பெரிய திரையில் அதிக வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால் குறும் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார் நடிகை லட்சுமி பிரியா. அப்படியாக அவர் நடித்ததில் மிகவும் பிரபலமான குறும்படம் தான் "லக்ஷ்மி". இது லக்ஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும் . இதில் அந்தப் பெண்ணினுடைய தகாத உறவைப் பற்றியும் காண்பிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது. 

தற்போது நடிகை லட்சுமி பிரியா , பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். லட்சுமி வெங்கட்ராகவன் ஆகியோரது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.