கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமிமேனன் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
கண்டுகொள்ளாத முன்னணி நாயகர்கள்! வேறு வழியில்லாமல் லட்சுமி மேனன் எடுத்த முடிவு!

இவர் விக்ரம் பிரபுவுடன் கும்கி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக புகழ்பெற்றார்.இதுமட்டுமில்லாமல் சுந்தரபாண்டியன் , குட்டிப்புலி நான் சிகப்பு மனிதன் , மஞ்சப்பை போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெக்க திரைப்படத்தில் கடைசியாக தமிழ்சினிமாவில் நடித்திருந்தார்.
தற்போது இவர் நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து "யங் மங் சங்" என்னும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் . இப்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமிமேனன். இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
அறிமுக இயக்குனரான ராஜசேகர பாண்டியன் அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் ஆரி எனும் நடிகருடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். இருப்பினும் இந்த புதிய திரைப்படத்தில் லட்சுமிமேனனின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக விஷால், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுடன் லட்சுமி மேனன் ஜோடி போட்டு வந்தார். ஆனால் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த பிறகு இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைந்தது. கடைசியில் தற்போது ஆரியுடன் நடிக்கும் அளவிற்கு மார்க்கெட் டவுனாகியுள்ளது லட்சுமிக்கு.