பிக்பாஸ் சேரன் இவ்வளவு மோசமானவரா? அதிர வைக்கும் தகவல்களுடன் புட்டு புட்டு வைத்த லட்சுமி நாராயணன்!

இயக்குனர் மற்றும் நடிகரான சேரனைப் பற்றி லக்ஷ்மி நாராயணன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இயக்குனர் சேரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் இதன்மூலம் பலதரப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோருக்கு முரண்பாடான கருத்துக்களை இயக்குனர் சேரன் கூறியமையால் அவர்களது ரசிகர்கள் சென்னை சமூகவலைத்தள பக்கத்தில் கண்டபடி கமல் செய்ய ஆரம்பித்தனர்.

இதனை அடுத்து நான் இனி அவர்களது காதல் விவகாரத்தில் தலையிட மாட்டேன் எனவும் இயக்குனர் சேரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேரனைப் பற்றி பல மோசமான தகவல்களை உள்ளடக்கியவாறு லட்சுமி நாராயணன் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிக நீண்ட பதிவில் சேரனைப் பற்றிய பல தகவல்களும் பகிரப்பட்டுள்ளது. லக்ஷ்மிநாராயணன் தன்னுடைய பதிவை சேரன் என்னும் மாமனிதர்? என ஆரம்பித்துள்ளார்.

இதைதொடர்ந்து சென்னை குறித்து பல ஆண்டு காலமாக நான் பார்த்த விஷயங்களை தான் இங்கு பதிவாக வெளியிட்டிருக்கிறேன். இந்த பதிவுக்கு லாஸ்லியா அல்லது கவினும் காரணம் கிடையாது . நான் அவர்களது ரசிகனும் கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார். சேரன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி அவருடைய படைப்புகள் கற்பனையும் தாண்டி மிகப்பெரிய சாதனை படைத்தவை.

இருப்பினும் அவரிடம் நான் 3 குறைகளை கண்டேன். முதலாவது சத்தியம் மற்றும் விசுவாசம் இல்லாத தன்மை இரண்டாவது பாகுபாடு மூன்றாவது இளைஞர்களின் ஒத்துப்போகாது இவை மூன்றையும் நான் அவரிடம் கண்டுள்ளேன் என்று லட்சுமி நாராயணன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

இவை மூன்றுக்கும் சான்றாக என்னால் பல கருத்துக்களை கூற இயலும். முதலில் இயக்குனர் சேரன் இயக்கிய பொற்காலம் என்ற திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இயக்குனர் சேரன் பொதுவாக்கவே ரஜினியின் பாராட்டுகளை மற்றும் அவரது கடிதங்களை தன்னுடைய விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதன்மூலம் அவர் பல வணிக நலன்களையும் அடைந்தார் என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் தன்னை பாராட்டிய ரஜினி மற்றும் கமல் ஆகியோர் மீது விஷத்தை கற்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் சேரன். தன்னை பாராட்டிய ஒருவரை இவ்வாறு செய்வது அவர்களிடம் விசுவாசம் காட்டாததற்கு சமம். இதனை நம்பிக்கை இல்லாத தன்மை என்று தான் கூற வேண்டும் எனவும் லக்ஷ்மிநாராயணன் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவருடைய பாகுபாடு குணத்தை அவரது மகளின் திருமண விஷயத்திலேயே நாங்கள் மிகத் தெளிவாக பார்த்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களோடு ஒத்துப்போகாத இதற்கு சான்றாக லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் காதலுக்கு எதிராக சேரன் செய்த செயல்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் எனவும் கூறியிருக்கிறார் .

இவ்வாறாக சேரனுக்கு எதிராக பல கருத்துக்களை அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்ட லக்ஷ்மி நாராயணனுக்கு இயக்குனர் சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூலம் தக்க பதிலடி அளித்துள்ளார். சேரன் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் திரு.லஷ்மிநாராயணன்... இன்று நீங்கள் என்னைப்பற்றி எழுதிய பெருமிதத்தில் நிம்மதியாக தூங்கிவிட்டதாக உணர்ந்தீர்களானால் நீங்கள் என்னை தினமும் திட்டி எழுதலாம். சந்தோசம் கொள்வேன்.. மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறார்.