மதுரை கண்மாய் விற்பனைக்கு! பாஜக பிரமுகர் பகிரங்க போஸ்டர்! வேடிக்கை பார்க்கும் போலீஸ்!

மதுரையில் கண்மாய் விற்பனை என்று சுவரொட்டியில் போஸ்டர் அடித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் ஊமச்சிகுளம் மற்றும் பண்ணைகுடி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. ஊமச்சிகுளம் பகுதியில் இடந்தகுளம் கண்மாய் என்றும் பண்ணைகுடியில் அம்மன்குளம் கண்மாய் என்றும் பிரபலமான கண்மாய்கள் உள்ளன.

இந்த கரைப்பகுதிகளை அத்துமீறி சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், மேலும் பலர் வீடுகளை கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவலை பாஜக பிரமுகர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த முக்கிய பிரமுகர் வியக்கும் வகையில் மதுரையில் "கண்மாய்கள் விற்பனை" இன்று சுவரொட்டிகளை தயாரித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சென்ற ஆண்டு ஒரு முறை, இதே பிரமுகர் கண்மாயை காணவில்லை என்றும் தேடி கண்டுபிடித்து தருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வினோதமான சுவரொட்டியானது மதுரையில் சில இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.