கர்ப்பிணியாக இருந்த போப் ஆண்டவரின் பெண் உதவியாளர் மர்ம மரணம்..! வாடிகனை சுற்றும் அதிர்ச்சி தகவல்கள்!

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போப் ஆண்டவரின் உதவியாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவமானது இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எரிட்ரியன் என்ற வம்சாவளியில் பிறந்தவர் மிரியம் வூலோ. இவர் போப் ஆண்டவரின் பணிப்பெண் ஆகவும், சாண்டா மார்டா என்ற பாதிரியாரின் விருந்தினர் மாளிகையில் பணிப்பெண்ணாகவும் பணியாற்றி வந்தார். போப் ஆண்டவரின் நுழைவாயில் காவலராகவும், அந்த அரண்மனையில் வசித்து வந்த ஆயர்களுக்கும், கார்டினல்களுக்கும் பணிவிடைகளை செய்து வந்துள்ளார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் கணவர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது வாட்டிகன் நகரத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவர்களை சந்தித்தபோது, நீரிழிவு நோய் அதிக அளவில் தாக்குவதால் மிரியம் வூலோ மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் அவர் மர்மமான முறையில் தன்னுடைய குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அவருடைய கணவரிடமும், புது காதல் அனிதாவும் முதற்கட்டமாக விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது அந்நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.