விட்டாச்சார்யா படம் போல கற்சிலையாக மாறிவரும் 35 வயது பெண்! காரணம் தெரியாமல் தடுமாறும் மருத்துவர்கள்..

பெண்ணொருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக மாறி வரும் சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ரோச்சடல் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரேச்சல் வின்னார்ட். இவருடைய வயது 35. கொஞ்ச நாளாகவே இவர் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம் அழைத்து சென்றபோது இவருக்கு வினோதமான நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ரேச்சலின் சிறுவயதில் முதுகில் ஒரு கட்டி இருந்துள்ளது. புற்றுநோய் என்று நினைத்து மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர். ஆனால் அவருடைய கால்களில் ஒரு எறும்பு இல்லாததை கண்டு பிடித்த பிறகுதான் இது வேறு நோய் என்பதை மருத்துவர்கள் ‌ அறிந்தனர். 12 வயதில் இருந்து அவருடைய உடம்பில் நோய்க்கான அறிகுறிகள் தோன்றியிருந்தாலும், 20 வயதில் தான் அவை வெளிப்படத்தொடங்கின. ஒரு முறை குழந்தை பாக்கியம் அடைந்த போதும், குழந்தை தங்கவில்லை. ஆபத்தான முறையில் குழந்தை பெற்று கொள்வது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது இவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக சிற்பமாக மாறி வருகிறது. இதனால் இவருடைய தலை மற்றும் கழுத்து பகுதிகளை இவரால் அசைக்க இயலவில்லை. அனைத்து உதவிகளையும் செய்து என்னுடைய கணவர் இவருக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறார். 

இதுகுறித்து ரேச்சல் கூறுகையில், "சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சுவையாகவே இருக்கிறேன். என் நிலையை பிறருக்கு எடுத்து கூறினாலும் அவர்கள் என்னை பரிதாபமாகவே பார்க்கின்றனர். நான் கூற வருவதை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை" என்று வேதனையுற்றார்.

இந்த விசித்திர நோயானது பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களையே குழப்பம் அடையச் செய்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.