கிணற்றுக்குள் இருந்து வந்த மருமகளின் முனகல் சப்தம்..! எட்டிப்பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கோயம்புத்தூரில் மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில் மருமகள் கிணற்றில் தன்னுடைய குழந்தைகளை வீசி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி மூலசெங்காடு  என்ற பகுதி அமைந்துள்ளது. இளையராஜா மற்றும் திவ்யா தம்பதியினர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி க்ஷ வர்னிகா(வயது 3), தன்ஷிகா( வயது 1½) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்திருக்கும் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

எப்போதும்போல இளையராஜாவின் தாயார் நேற்றைய தினம் அதிகாலையில் எழுந்து முகம் கழுவ கிணற்றடிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு முனகல் சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் கேட்டவுடன் அவர் எல்லா இடங்களிலும் தேடி பார்த்து இருக்கிறார்.

கடைசியில் கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்பதை அவர் கண்டறிந்தார். அப்போது கிணற்றுக்குள் அவரது மருமகள் திவ்யா மற்றும் குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தான் பார்த்ததை மகன் இளையராஜாவிடம் வந்து பதறியடித்துக்கொண்டு கூறியிருக்கிறார்.

பின்னர் தகவலறிந்து வந்த இளையராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரும் இணைந்து கிணற்றுக்குள் இருந்து திவ்யாவையும் வர்ணிகாவையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வர்ணிக்கவே பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் திவ்யாவிற்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர் கூறியிருக்கிறார் . பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திவ்யாவின் மற்றொரு குழந்தையான தன்ஷிகாவை அங்கிருந்தவர்கள் கிணற்றிற்குள் தேடினர்.

கடைசியில் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் உடலை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் திவ்யாவை விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது நேற்றைய முந்தையநாள் திவ்யாவிற்கு அவரது மாமியாருக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது . இதனால் மனமுடைந்து போன திவ்யா சோகம் தாங்க முடியாமல் கிணற்றில் தானும் விழுந்து தன் குழந்தைகளையும் விழ செய்துவிட்டு இறந்து போய்விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். 

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.