கொரோனாவால் ஊரே முடங்கிய நிலையில் 100 பேரை கூட்டி வைத்து பெண் சாமியார் செய்த செயல்..!

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மத போதனைக்கு ஏற்பாடு செய்த பெண் சாமியாரை காவல்துறையினர் அடித்து உதைத்திருப்பது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 24,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 5,30,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனால் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மத போதனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வானது அந்த பெண் சாமியாரின் வீட்டிலேயே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதனை தெரிந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று இந்த கூட்டத்தை ரத்து செய்யுமாறு சாமியாரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவரோ காவல்துறையினரின் உத்தரவுக்கு செவிசாய்க்கவில்லை. மேலும் மேலும் காவல்துறையினர் அந்த பெண் சாமியார் இடம் மதபோதனை கூட்டத்தை ரத்து செய்யுங்கள் இல்லையெனில் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் தன்னை வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் தன்னிடமிருந்த பட்டாக்கத்தியை காவல்துறையினரிடம் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் பெண்ணென்றும் பாராமல் அந்த சாமியாரை அடித்து துவைத்துள்ளனர். மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்களையும் காவல்துறையினர் சரமாரியாக லத்தியால் அடித்தனர். மேலும் அந்த பெண் சாமியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.