காவல் நிலையத்தில் சபலம்..! பெண் போலீஸ் ஸ்வப்ன சுஜா செய்த கேவலமான செயல்..! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்!

கோவையில் திருடர்களிடம் இருந்து மீட்ட 50 சவரன் நகையை சுருட்டிய பெண் காவலரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரண்டாம் நிலை போலீசாக பணியாற்றி வந்தவர் ஸ்வப்ன சுஜா. நீதிமன்றம் தொடர்பாக இருக்கும் பணியை கவனித்துக் கொள்வதுதான் ஸ்வப்ன சுஜாவின் வேலையாகும். இந்த காவல் நிலையத்திற்கு தொடர்புடைய 11 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 50 சவரன் நகையை போலீசார் மீட்டெடுத்துள்ளனர். இந்த 50 சவரன் நகையை பத்திரமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணியை போலீசார் ஸ்வப்ன சுஜாவிடம் வழங்கியுள்ளனர்.

ஆனால் ஸ்வப்ன சுஜா அதிகாரிகள் கூறியதை பின்பற்றாமல் நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் பலமுறை விசாரணையும் நடைபெற்றுள்ளது. விசாரணையின்போது ஸ்வப்ன சுஜா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் காவல்துறையை சேர்ந்த பல உயர் அதிகாரிகளின் பெயரைக் கொண்டு மழுப்பி இருக்கிறார். 

இருப்பினும் சொப்பன சுஜா தன் கைவசம் இருந்த 50 சவரன் நகையை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் இழுத்து வந்து இருக்கிறார். இதனையடுத்து சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் ஸ்வப்ன சுஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். இதனால் பயந்து போன ஸ்வப்ன சுஜா பணியிலிருந்து விடுப்பு எடுத்து சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் தற்போது ஸ்வப்ன சுஜாவை அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் காணாமல் போன நகை நிலவரம் குறித்து தகவல் வெளிவரும் என்று போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.