காதல் திருமணம் செய்தும் குழந்தை இல்லை..! காரணம் மாமியார்? கணவன் வீட்டில் இல்லாத போது மனைவி செய்த செயல்!

புதுச்சேரியில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த காதல் திருமணம் செய்துகொண்ட பெண் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோவில் வீதி அமைந்துள்ளது. இங்கு செண்பக வடிவு மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் வசித்து வருகின்றனர். மணிகண்டன், அன்னலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணமாகி பல ஆண்டுகள் அன நிலையிலும் அன்னலட்சுமி - மணிகண்டன் தம்பதிக்கு குழந்தை இல்லை. 

மணிகண்டன் அவரது மனைவி மற்றும் தாயார் செண்பகவடிவு ஆகிய அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இதனால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று அன்னலட்சுமி கூறி வந்துள்ளார். இதனை மையமாக வைத்து மணிகண்டனின் தாயார் செண்பகவடிவிற்கும் மருமகள் அன்னலட்சுமிக்கும் இடையே நேற்றைய முன் தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செண்பகவடிவு வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாமியார் வீட்டை விட்டு சென்றதால் மருமகள் அன்னலட்சுமி தொடர்ந்து சோகமாக காணப்பட்டார். மனமுடைந்து காணப்பட்ட அவரை மணிகண்டன் சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார். இருப்பினும் அவர் மன உளைச்சலோடு காணப்பட்டு இருந்திருக்கிறார்.

இதனையடுத்து மணிகண்டன் தனியாக வேறு வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்று விடலாம் என்று யோசனை செய்திருக்கிறார். உடனே தன் மனைவியை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியே சென்று வாடகைக்கு வீடு தேடி அலைந்திருக்கிறார். வெளியே சென்று வீடு திரும்பிய மணிகண்டனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அன்னலட்சுமி துப்பட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கிறார். மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அன்னலட்சுமியின் தற்கொலை குறித்து அருகில் இருந்த பெரியகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.