மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வந்த ஃபேஷன் டிசைனர் வேலையை விட்டு ஆடு மேய்த்து வரும் பெண்மணி..! ஏன் தெரியுமா? மிரள வைக்கும் காரணம்!

பெங்களூருவை சேர்ந்த பெண்ணொருவர் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று பேஷன் டிசைனர் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்வேதா தோமர் என்ற பெண் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தன் கணவர் ஊரான பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார். என்ஐஐஎப்டி கல்வி நிறுவனத்தில்  ஃபேஷன் டிசைனிங் படிப்பை பயின்றுள்ளார். இதன் மூலம் இவர் சிறந்த ஃபேஷன் டிசைனராக மிகப் பெரிய நிறுவனத்தில் பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஸ்வேதாவிற்கு தான் செய்து வந்த வேலையில் பெரிதாக ஈடுபாடு இல்லை. வெறும் பணத்திற்காக வேலை செய்யக்கூடாது மனதிற்கு பிடித்தால் தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். புதிதாக வேறு ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்று நினைத்துள்ளார். ஆகையால் தன்னுடைய லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த தொழிலை விட்டுவிட்டார்.

ஒருநாள் தன் கணவருடன் வெளியே சென்றபோது ஆடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆடுகளைப் பார்த்து அவருக்கு ஆடு வளர்ப்பில் ஆர்வம் இருந்தது தெரியவந்துள்ளது. ஆகையால் ஆடு பராமரிப்பில் ஈடுபடலாம் என்று யோசனை செய்து இருக்கிறார்.

உடனே ஆடுகளை எங்கு வைத்து பராமரிப்பது அதற்கான இடங்களை எப்படி தேர்வு செய்வது என்பதை ஆலோசனை செய்திருக்கிறார். பெங்களூருவில் தேடி பார்த்த பொழுது ஆடு பராமரிக்கும் வகையில் சரியான இடம் அமையவில்லை. ஆகையால் உத்தர்கண்ட் மாநிலத்தில் தெஹ்ராதூன் பகுதிக்கு அருகில் இருக்கும் ராணிபோக்ரி என்கிற கிராமத்தில் ஆடுகளை வளர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் சுமார் 250 ஆடுகளை மட்டுமே முதலில் வைத்து இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் தன் பணியை விரிவாக செய்வதற்காக வங்கியிலும் கடன் பெற்று அதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆண்டு வருமானமாக சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறார் அந்த புத்திசாலி பெண்மணி.

படித்த படிப்பை விட்டு விட்டு தன் மனதிற்கு பிடித்தது போல் அவர் தேர்வு செய்த இந்த தொழிலானது அவருக்கு நல்ல லாபத்தையும் அளிப்பதாக கூறி இருக்கிறார். மேலும் உத்திரகாண்ட் போலவே பல இடங்களிலும் இந்த ஆடு வளர்ப்பு இடங்களை அமைக்க வேண்டும் எனவும் ஸ்வேதா ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் . ஆடு வளர்ப்பு பணியில் மட்டுமில்லாமல் அருகில் இருப்பவர்களுக்கு ஆடு வளர்ப்புக்குத் தேவையான பயிற்சியையும் வழங்கி வருவதாகவும் கூறி இருக்கிறார்.