முதலிரவே நடக்கலை..! அதான்..! நடுவீட்டில் சடலமாக தொங்கிய டீச்சர்..! திருமணமான 2 மாதத்தில் அரங்கேறிய பகீர்!

திருமணமான இரண்டே மாதங்களில் போலீஸ் அதிகாரியின் மனைவி வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இருக்கும் பொன்னேரி, என்சிடிபிஎஸ், வல்லூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி செல்வன். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பெயர் பத்ம பிரியா (வயது 24). இவர் அந்த பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ராஜ்கமல் என்பவர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தம்பி பெயர் ராஜாராம். இவர் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமனுக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கப் பட்டது. இந்நிலையில் ராஜ்கமல், அவரது தம்பிக்காக பத்ம பிரியாவை அவரது பெற்றோரிடம் கடந்த 26.2.2019 தினம் பெண் கேட்டிருக்கிறார்.

பின்னர் தன்னுடைய தம்பி ராஜாராம் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக அவர் பெண் வீட்டாரிடம் கூறியிருக்கிறார். ஆகையால் வரதட்சணையாக விலை உயர்ந்த சொகுசு காரையும் 50 சவரன் நகையும் வழங்குமாறு பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர். இதனைக் கேட்ட பெண் வீட்டார் மாப்பிள்ளை நல்ல பணியில் இருக்கிறார் என்பதால் அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் தர தயாராக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ராஜா ராமுக்கும் பத்மபிரியாவிற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மேலூரில் அமைந்திருக்கும் திருவுடை அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மறுநாள் கோலாகலமாக திருமண வரவேற்பு நடந்து முடிந்தது. திருமணமான அன்றே பத்மபிரியாவிற்கு பிரச்சினை துவங்க ஆரம்பித்திருக்கிறது. மாப்பிள்ளை விட்டார் பெண் வீட்டாரிடம் விலை உயர்ந்த சொகுசு காரை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் சற்று விலை குறைந்த காரை வரதட்சணையாக வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் மற்றும் அவரது பெற்றோர் தொடர்ந்து பத்மபிரியா அவரது குடும்பத்தினரை கடுமையாக சாடியுள்ளனர். 

திருமணம் முடிந்து சாந்தி முகூர்த்தம் ராஜாராம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அந்த தம்பதியினருக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெறவில்லை. இதுகுறித்து பத்மபிரியா தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார். அவர்கள் கேட்ட வரதட்சணையை நாம் கொடுக்காததால் எனக்கும் அவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்காது என்று தன்னுடைய கணவன் கூறியதாக தாயாரிடம் கூறியுள்ளார் பத்மபிரியா. இதனைக் கேட்ட பத்மா பிரியாவின் தாயார் மகேஸ்வரி மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். 

செய்வதறியாது திகைத்து நின்ற மகேஸ்வரி உடனடியாக தன் குடும்பத்தினருடன் சென்று மாப்பிள்ளை வீட்டில் நியாயம் கேட்டு உள்ளனர். இந்நிலையில் ராஜாராமின் அண்ணன் ராஜ்கமல் , அவரது மனைவி திவ்யா, மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் சேர்ந்து நாங்கள் கேட்ட வரதட்சனை மற்றும் சீர்வரிசை பொருட்களை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் கடைசிவரை உங்கள் மகளுக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெறாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்பு பெண் வீட்டார் நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருகிறோம் என்று வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து ராஜாராமின் பெற்றோர் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அன்றைய தினமும் சாந்திமுகூர்த்தம் நடைபெறவில்லை என்று பத்மபிரியா தன்னுடைய தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார். அதாவது அன்றைய தினம் இரவு ராஜாராம் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வருவதாகவும் கூறி இருக்கிறார். இதனைக் கேட்டு பத்ம பிரியாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி பத்மபிரியா ஆவடியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ சொல்லும்படி பணிவுடன் கேட்டிருக்கிறார். பின்னர் அந்த காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் ராஜாராம் அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனைப் பற்றி அறிந்து கொண்ட ராஜாராமன் பெற்றோர் மற்றும் அண்ணன் ஆகியோர் பத்மபிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக சாடியுள்ளனர். மேலும் அவர்களிடம் எதற்காக போய் போலீசில் புகார் அளித்தீர்கள் என்று சண்டையிட்டு உள்ளனர். சண்டையிட்டதோடு மட்டுமல்லாமல் பத்மபிரியாவை ராஜ்கமல் கடுமையாக மிரட்டியிருக்கிறார்.

இவர்களது மிரட்டலுக்கு அஞ்சாத பத்மபிரியா திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பத்மப்ரியாவை விவாகரத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு அவரது கணவர் ராஜாராம் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜாராம் தன்னுடைய மனைவி பத்மபிரியா அவருக்கு சரியாக காலை 10:39 மணி அளவிற்கு போன் செய்து மிரட்டி இருக்கிறார். பின்னர் இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறி பத்மப்ரியா அழுதிருக்கிறாள். என்னால் தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும் என்று கூறி மனவேதனை அடைந்து இருக்கிறார் பத்மபிரியா.

இதனைக் கேட்ட அவரது பெற்றோர் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி சமாதானப் படுத்தி உள்ளனர். வல்லூரில் உள்ள பத்மபிரியாவின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது வீட்டில் இருந்த எல்லோரும் கிளம்பி சென்றுள்ளனர். வீட்டில் தனிமையில் இருந்த பத்மப்ரியா கடந்த 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வாழ விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். பின்னர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் தன்னுடைய பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கதறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்ட அவரது பெற்றோர் அடித்து பிடித்து வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இருந்த பத்மபிரியாவை மீட்டு திருவொற்றியூரில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் பத்மபிரியா அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பத்மபிரியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்றும் எதற்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பத்மபிரியாவின் பெற்றோர் இந்த கடிதத்தை வைத்து ராஜாராம் மற்றும் அவரது அண்ணன் ராஜ்கமல் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யுமாறு புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த வழக்கை குறித்து பொன்னேரி ஆர்டிஓ தீவிர விசாரணை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு மாதங்களில் வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.