என் கணவனுக்கு 37 வயசு..! எனக்கு 22 வயசு! அதான் கோவிந்தராஜை தேடி வந்தேன்..! 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஆனந்தி செய்த தகாத செயல்!

டிக் டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்ட ஆண் நண்பரை தேடி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு பெண் ஒருவர் செய்த செயல் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நாளுக்கு நாள் டிக் டாக் செயலி மூலம் பெரும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. செயலியின் பயன்பாட்டினால் பலரும் தவறான பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனையடுத்து இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் தொடர்ந்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்த டிக் டாக் செயலியால் மேலும் ஒரு குடும்பம் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருபவர் தான் முருகன். இவருக்கு வயது 37. இவருடைய மனைவி பெயர் ஆனந்தி (வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஐந்து மற்றும் இரண்டு வயதில் 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தி டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 26) என்பவருடன் டிக் டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

நாளடைவில் அவர்களுக்கிடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பலமுறை பேசியுள்ளனர். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கோவிந்தராஜ் ஒரு முகவரியை வைத்து தன்னை சந்திக்குமாறு கூறியிருக்கிறார். கோவிந்தராஜின் பேச்சை நம்பி ஆனந்தி தனது 2 மகன்கள் மற்றும் கணவரை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி கோவிந்தராஜ் அளித்த முகவரியான தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி க்கு சென்றிருக்கிறார். 

கோவிந்தராஜ் அளித்த முகவரிக்கு சென்ற ஆனந்தி, அங்கு அவர் இல்லாததால் அருகிலிருந்த வேறொரு பெண்ணிடம் விசாரணை செய்து இருக்கிறார். விசாரித்த பொழுது அந்தப் பெண் கோவிந்தராஜின் சகோதரி என்றும், மேலும் கோவிந்தராஜ் அங்கு இல்லை என்பதும் தெரியவந்தது. இதன் மூலம் கோவிந்தராஜ் தன்னிடம் தவறான முகவரி அளித்தல் ஏமாற்றி உள்ளதை ஆனந்தி அறிந்துகொண்டார். இதையடுத்து கோவிந்தராஜின் சகோதரி தாரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஆனந்திக்கும் செல்போன் மூலமாக கோவிந்தராஜுக்கும் அறிவுரை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் போலீசார் ஆனந்தியின் கணவர் முருகனுக்கும் இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிந்தராஜின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து ஆனந்தியை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த ஆனந்தியின் கணவர் முருகன் , அவரை பத்திரமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். டிக்டாக் மோகத்தால் ஏற்பட்ட பழக்கத்திற்காக பெற்ற பிள்ளைகளையும் கட்டின கணவனையும் கள்ள காதலனுக்காக வீட்டைவிட்டு இந்த இளம்பெண் ஓடிய சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.