10 நாளில் திருமணம்...! பரபர ஏற்பாடு..! ஆனால் நடு வீட்டில் தூக்கில் தொங்கிய 28வது பெண் டாக்டர்! பதற வைக்கும் காரணம்!

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஷாஹ்தாப் ஷிரின் முகமது அகேஃப்  (வயது 28) என்ற பெண் மருத்துவர் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இவர் சதாப் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அடுத்த மாதம் ஏழாம் தேதியன்று இவருக்குத் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த குடும்பம் மிகப்பெரிய சோகத்தை சந்தித்துள்ளது .

அதாவது ஷாஹ்தாப் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை பற்றி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கின்றனர்.

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது . தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் வீட்டில் எல்லா இடங்களிலும் சோதனை செய்துள்ளனர். சோதனையின் போது அந்த பெண் மருத்துவரின் தற்கொலைக்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த பெண் மருத்துவரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.