சென்னை அடுத்த செங்கல்பட்டில் டாக்டர் ஒருவர் குடும்ப தகராறின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட! கணவனின் ஒரு சொல்! டாக்டர் மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

சென்னை அடுத்த பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள எஸ்.எஸ்.எம் நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவர் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் அதே மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவராகப் பணியாற்றும் மகர ஜோதி என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கம் பின்னர் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஷி என்ற 12 வயது மகனும், ஓமிஷா என்ற 4 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட தொடங்கின. இந்நிலையில் சில தினங்களில் பிரச்சனை வெடித்து வளர்மதி அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றதும் உண்டு.
திடீரென்று சில தினங்களுக்கு முன்பு ரிஷித் சைக்கிளில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான். இதற்கு வளர்மதி ஒப்புக்கொள்ளவில்லை. தாயாரின் வார்த்தையை மீறி ரிஷித் அன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளான்.
இந்த தகவல் தெரிந்தவுடன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. உனக்கு குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை, நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என்பது போல் கணவன் கடிந்து கொண்டுள்ளார்.
இதனால்தனது அறைக்குள் சென்று வளர்மதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலே பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவமானது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.