முதல் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் அடுத்த குழந்தை பெற்ற பெண்! கஜகஸ்தான் அதிசயம்

முதல் குழந்தை பிறந்த மூன்றே மாதங்களில் 2-வது குழந்தை பிறந்த அதிசயம் கசக்ஸ்தான் நாட்டில் நிகழ்ந்துள்ளது.


கசகஸ்தான் நாட்டில் லிலியா என்ற பெண் வசித்து வந்தார்‌. இவர் சென்ற ஆண்டு மே மாதம் கர்ப்பமானார். இரட்டை குழந்தைகள் கருவில் இருந்தன. அதற்கேற்றவாறு மே மாதம் 11-ஆம் தேதியன்று இவர் லியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ஆனால் இன்னொரு‌ குழந்தை பிறக்கவில்லை. 5,00,000 பேர்களில்  ஒருவருக்கு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும். இரட்டையர்களாக  இருப்பினும் இருவரும் தங்களுக்கு என தனித்தனி கருப்பைகளை உருவாகியிருந்ததால் இருவரும் தனித்தனியாக இழக்கும் தன்மையை பெற்றனர்.

யாரும் எதிர்பாராதவாறு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதியன்று மேக்ஸிம் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது குறித்து அவருடைய உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

லிலியா கூறுகையில், "எனக்கு இது போன்ற அசாதாரண உடல் நிலை இருப்பதை மருத்துவர்களின் மூலம் அறிந்து கொண்டேன். மருத்துவர்கள்  அக்கறை கொண்டதால் என்னுடைய முதல் பிரசவம் எளிதாக இருந்தது. ஆனால் 2-வது பிரசவம் கடினமாக இருந்தது. தற்போது இரண்டு குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என்று கூறினார். 

இந்த நிகழ்வானது கசக்ஸ்தான் நாட்டில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.