சாலையை கிராஸ் செய்வதில் அலட்சியம்! பஸ் டயரில் சிக்கி நசுங்கிய மூதாட்டி! பதைபதைக்க வைக்கும் CCTV!

சென்னையில் சாலையை கடந்து சென்ற போது பெண்னொருவர் மீது பேருந்து ஏறி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் 29A பேருந்து தளம் இயங்கி வருகிறது. இந்த பேருந்தானது பெரம்பூர் முதல் அண்ணாசதுக்கம் வரை செல்கின்றது. சாலை நெரிசலாக இருந்த பகுதியில் பேருந்து விரைவாக செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தது. 

ஆட்டோக்கள், பேரூந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அது என சாலையில் செல்ல இயலாமல் தவித்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராவிதமாக பெண்ணொருவர் சாலையை கடக்க முற்பட்டார். பேருந்துக்கு அருகே சென்று கொண்டிருந்த அவரை பேருந்து ஓட்டுநர் கவனிக்க இயலவில்லை. இதனால், பேருந்தை முன்னே செலுத்தினார்.

துருதிர்ஷ்டவசமாக பேருந்து பெண்ணின் மீது மோதியதில் அவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தலை மற்றும் கால் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் சாலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கண்காணித்தனர். காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் விசாரணை நடத்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.